சோழர்கள் - பாகம் 2
Author: கே.ஏ. நீலகண்டசாஸ்திரி
Description:
பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது.
சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல், அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.
சோழர் காலத்தின் முழுமையான வரலாறு, சோழப் பேரரசின் ஆட்சி முறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, வாணிபம், தொழில், விவசாயம், நிலஉரிமை, கல்வி, சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றை, சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்