ஊருக்கு நல்லது சொல்வேன்

Author: தமிழருவி மணியன்

1 2 3 4 5

Description:
மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன.

தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது.

நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை, பாதுகாக்க வேண்டியவை.

Please log in or register to leave a comment .

“You are not done with a book until you pass it to another reader.”

Donalyn Miller

Copyright BoocShare - All Rights Reserved